அருள் நிறை அல்லாஹ் அன்புடையோனே
அகிலம் படைத்தாலும் றஹ்மானே
ஒன்றாயக் கூடுகின்றோம்இ
உன்புகழ் பாடுகின்றோம்இ
உனதருள் வேண்டுகின்றோம்
காலைக் கடன்கள் முடித்ததுமே
கருத்தாய் வந்தோம் கலைக் கூடம்
ஞாலம் போற்றும் உத்தமராய்
நாடும் நாமும் நலம் பெறவே
சீர்கலை பெறுவோம் - நேர்பணி புரிவோம்
சீலமுள்ளோராய் வாழ்ந்திடுவோம் ஃஃ
(அருள்...)
ஆன்றோர் போற்றும் சரந்தீபில்
இயங்கும் கினியமை மாணவர் நாம்
சான்றோராக வாழ்ந்திடவே
அருள்வாய் அல்லாஹ் அனுதினமும்
சீர்கலை பெறுவோம் - நேர்பணி புரிவோம்
சீலமுள்ளோராய் வாழ்ந்திடுவோம் ஃஃ
(அருள்...)







